தினசரி கூலி தொழிலால் வாழ்வாதாரம் நடத்தி வரும் இவர்கள், தனியாரிடம் இடம் வாங்கி வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இதனை முன்னிட்டு அருகிலுள்ள எம்.வேட்டர்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, இன்று மொரப்பூர் இஸ்லாமிய மக்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தங்களது மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என எச்சரித்தனர்.
மனு அளிப்பதில் விசிக ஒன்றிய செயலாளர் லோகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தருமன், காவிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.