2025ஆம் ஆண்டு தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு, மை தருமபுரி அமைப்பினர் சமூக சேவையில் ஆற்றிய முக்கிய பங்களிப்பிற்காக பாராட்டப்பட்டனர். 2024ஆம் ஆண்டில் தருமபுரி அரசு மருத்துவமனை குருதி வங்கிக்காக பல இரத்ததான முகாம்களை நடத்தி, அவசர சூழ்நிலைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் வழங்கி உயிர் காக்கும் பணியை சிறப்பாக செய்ததற்காக மை தருமபுரி அமைப்பிற்கு அரசு மருத்துவமனை குருதி வங்கி சார்பில் பாராட்டு வழங்கப்பட்டது.
அமைப்பினர் அவசர இரத்ததான உதவி, இரத்ததான முகாம்கள் நடத்தல், புதிய இரத்த கொடையாளர்களை ஊக்குவித்தல், இரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பாராட்டு சான்றிதழை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப.,, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகர், மற்றும் குருதி வங்கி மருத்துவர் டாக்டர் கன்யா ஆகியோர் வழங்கினர்.
மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், சையத் ஜாபர், சண்முகம், தன்னார்வலர்கள் அம்பிகா, நித்யா ஆகியோர் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வு சமூக நலப்பணியில் தன்னார்வ அமைப்புகள் ஆற்றும் பங்கின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியது.