தருமபுரி – அக்டோபர் 13 -
தருமபுரி மாவட்ட அரூரில் 9 நாள் தொடர் இலவச கண்பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் ஆரம்பமாகியது. உலக பார்வை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இம்முகாம் அரூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. முகாமை தருமபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சாந்தி, அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர், மற்றும் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சிவகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்த பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. முதல் நாளில் சுமார் 15-க்கும் மேற்பட்டவர்கள் அறுவை சிகிச்சை பெற்றனர்.
இம்முகாமில் ரோட்டரி துணை ஆளுனர்கள் விஜயகுமார், கண்ணன், ரோட்டரி கிளப் ஆப் சேலம் எலைட்: தலைவர் மகேஸ்குமார், செயலாளர் அருண்பிரசாத், பொருளாளர் யுவராஜ், ரோட்டரி கிளப் ஆப் அரூர்: தலைவர் நாராயணன், செயலாளர் தமிழரசன், பொருளாளர் எம்.கோபிநாத், மற்ற நிர்வாகிகள் மற்றும் ஒழுங்குநிலையர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த முகாம், கண் பார்வை சேவையில் சமூகத்திற்கு இலவச மருத்துவ சேவையை வழங்குவதற்கான சிறந்த முயற்சி என பாராட்டப்பட்டது.