தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட (NSS) சிறப்பு முகாம் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2, 2025 வரை சிறப்பாக நடைபெற்றது. முகாமின் இறுதி நாளில் நடைபெற்ற விழாவில் அரூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி, பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. ஆறுமுகம் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் இரா. கதிரேசன் வரவேற்புரை வழங்கினார். இணை திட்ட அலுவலர் து. சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புரை அரூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் வழங்கினார். நன்றியுரை ஆசிரியர் பகுதி சேகர் வழங்கினார்.
நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் மாணவர்கள் சமூகப் பணிகளில் ஈடுபட்டு, சமூகப் பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்வது முக்கியம் என விருந்தினர்கள் தெரிவித்தனர்.