மொரப்பூர், அக். 13 -
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம் நவலை ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், நவலை கிராமத்தில் வசிக்கும் திருமதி. தேவி சங்கர் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
திருமதி. தேவி சங்கர், நவலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள்—தெருவிளக்கு, நல்ல குடிநீர், ஆதரவற்றோருக்கு வீடு வழங்குதல்—மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் சிறப்பாக செய்து வருகின்றார். இவ்விருது விழாவில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர், திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. சிறப்பு விருந்தினராக கலந்து, திரு. அரிமா முத்து, திரு. இராமசாமி (MJF அம்மா கிரானைட்ஸ் தொழிலதிபர், அரூர்), தர்மபுரியில் பணியாற்றும் முக்கிய சமூக சேவகர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமதி தேவி சங்கரின் தன்னலமற்ற சேவை, கிராம மக்களுக்கு நேரடி ஆதரவாக வெளிப்பட்டு, சமூக முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டானது என்றும் தெரிவித்தனர்.