தருமபுரி – அக்டோபர் 13 -
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள ஸ்ரீ சிவராம் சில்க்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் 40 மாணவர்களுக்கு விளையாடுவதற்கு தேவையான விளையாட்டு சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இது மாணவர்களின் உடல் நலத்தையும் விளையாட்டு திறனையும் மேம்படுத்தும் வகையில் பெரிதும் உதவியாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ சிவராம் சில்க்ஸ் நிறுவன பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.