மொரப்பூர், அக்.01 –
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக நல சேவைகளை செய்து வரும் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை, இன்று (01.10.2025) மொரப்பூர் அருகே உள்ள லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ஆயுத பூஜை விழாவை சிறப்பாக நடத்தி வைத்தது.
இந்த விழாவில் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.சென்னையன் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்திந்திய வேளாண்மை மாணவர் சங்கம் தேசிய செயலாளர் முனைவர். வினோத், சமூக சேவகர் மருத்துவர் அசோகன், திரு.சதீஷ், மொரப்பூர் வணிகர் சங்க தலைவர் திரு.குமார், திரு.செட்டு, திரு.சாமிக்கண்ணு, திரு.தமிழரசன், திரு.விஜயகுமார், அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.கார்த்திகேயன் மற்றும் முதியோர் இல்ல பாதுகாவலர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு பொரி கடலை, இனிப்புகள், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் முதியோருடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தருமபுரி மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து சேவைகளை செய்து வரும் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளையின் இந்த உதவி நடவடிக்கை, முதியோருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

.jpg)