தருமபுரி, அக்.01 –
கரூரில் 41 பேர் உயிரிழந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் எனவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் இன்று (01.10.2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி BSNL அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சிவா தலைமையேற்றார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் கல்வி மற்றும் பொருளாதார பிரிவின் மாநில துணை செயலாளர் தோழர் சிவஞானம், முற்போக்கு இளைஞர் முன்னணித் தோழர் பழனி, சுதந்திர வளர்ச்சிக்கான விவசாய சங்கத் தோழர் முனுசாமி, CPI(ML) லிபரேஷன் மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ், புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
அவர்களின் உரைகளில்,
-
“கரூரில் நடந்த படுகொலையின் முதன்மை காரணமாக தவெக தலைவர் விஜய் உள்ளார். அவரை பிணையில் வெளிவர முடியாத கொலை வழக்கில் உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனக் கோரினர்.
-
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இறுதியாக, புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம் நன்றி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், “உழைக்கும் மக்களின் உயிரை கிள்ளுக்கீரையாக கருதும் அரசியல் பொறுக்கிகளின் கூட்டங்களை புறக்கணிக்க வேண்டும்” என மக்களை அழைத்துக் கொண்டனர்.

.jpg)