மாரண்டஅள்ளி, அக். 08 -
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மின்வாரிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், ரயில் நிலையம் அருகே பழுதான உயர்அழுத்த புதை வடம் மாற்றியமைக்கும் பணி நடைபெற இருப்பதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பணிகளை முன்னிட்டு, அக்டோபர் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள்: மாரண்டஅள்ளி, அத்திமுட்லு, அமானிமல்லாபுரம், சிக்கமாரண்டஅள்ளி, கும்மனூர், பாளையம், பஞ்சப்பள்ளி ஆகியவை. இப்பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழக்கம்போல் வழங்கப்படும் என பாலக்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) முனிராஜி அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.