தருமபுரி, அக். 07 -
தருமபுரி மாவட்டத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் கீழ், மொத்தம் 78,360 நபர்கள் ரூ.50.46 கோடி மதிப்பீட்டில் நிதியுதவி பெற்று பயனடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தகவல் வழங்கினார்.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் முக்கிய நிதியுதவித் திட்டமாகும்.
வருட வாரியாக நிதியுதவி விவரம்:
-
2021-2022: 21,204 நபர்கள், ரூ.12.54 கோடி
-
2022-2023: 21,873 நபர்கள், ரூ.12.84 கோடி
-
2023-2024: 21,873 நபர்கள், ரூ.13.37 கோடி
-
2024-2025 (மார்ச் 10, 2025 வரை): 13,410 நபர்கள், ரூ.11.71 கோடி
இதன் மூலம் மொத்தம் 78,360 நபர்கள் ரூ.50.46 கோடி மதிப்பீட்டில் நிதியுதவி பெற்றுள்ளனர்.

