பாலக்கோடு, அக். 13 -
இந்நிலையில், நேற்று காலை சுமார் 8 மணியளவில் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நேரமாகியும் காவல் நிலையத்திற்கு வராததால் போலீசார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் எடுக்காததால் சந்தேகம் ஏற்பட்ட போலீசார் அவரது குடியிருப்பிற்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டின் உள்ளே கீழே விழுந்து மயங்கிய நிலையில் இருந்த ஆய்வாளர் வெங்கட்ராமனை கண்ட போலீசார் உடனடியாக மீட்டு, போலீஸ் வாகனத்தில் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரை உடனடியாக பைசுஅள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவல் அறிந்த பாலக்கோடு டி.எஸ்.பி. ராஜசுந்தர், இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், பார்த்திபன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நிலைமையைப் பரிசோதித்தனர் மற்றும் மருத்துவர்களிடம் சிறந்த சிகிச்சை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் திடீரென மயங்கி விழுந்து, மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்ட சம்பவம் பாலக்கோடு காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.