மாரண்டஅள்ளி, அக்.28 -
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் உள்ள 6வது வார்டில், குடிநீர் வழங்கல் துறை சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், 6வது வார்டின் புதுத்தெரு, போயர் தெரு, பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, குடிநீர் வசதி மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து உடனடி தீர்வுகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இக்கூட்டத்தில் இளநிலை உதவியாளர்கள் சம்பத், தங்கராஜ், கோவிந்தராஜ், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

.jpg)