தருமபுரி, அக்.28-
தருமபுரி நகரில், செல்போன் சேல்ஸ், சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக சித்தராஜ், செயலாளராக கலைவேந்தன், பொருளாளராக வெற்றிச்செல்வன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்களாக அருண்குமார், தீனதயாளன், துணைச் செயலாளர்களாக கோவிந்தசாமி, செல்வராசு, துணை பொருளாளர்களாக சுரேஷ், ராஜூ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிர்வாகக் குழு உறுப்பினர்களாக மணிவண்ணன், தங்கராஜ், சிலம்பரசன், அன்பு, சரவணன், விக்னேஷ், மணிகண்டன், இளையராஜா, தம்பித்துரை, மாதேஸ்வரன், வெற்றிவேல், அய்யப்பன், கார்த்திக், ராமச்சந்திரன், வினோத், குணசேகரன், முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்குவது, மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் ஆலோசனை கூட்டம் நடத்துவது, சங்க சந்தா வசூல் செய்வது, சர்வீஸ் உதிரி பாகங்களுக்கு விலை நிர்ணயம் செய்வது, மேலும் மொத்த விற்பனையாளர்கள் சில்லரை விற்பனை செய்யக்கூடாது என பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

.jpg)