Type Here to Get Search Results !

பணம் இரட்டிப்பு வாக்குறுதி – ரூ.60 லட்சம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி மனு.


தருமபுரி, அக்டோபர் 23:

பணம் இரட்டிப்பு வாக்குறுதி அளித்து ரூ.60 லட்சம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என கோரி, தருமபுரி மாவட்டம் மன்னேரியை சேர்ந்த முத்துலட்சுமி உள்ளிட்டோர் இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவில் அவர்கள் தெரிவித்ததாவது: “நாங்கள் மன்னேரி பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த 2024 ஆம் ஆண்டில் எங்கள் பகுதியைச் சேர்ந்த கலா மற்றும் அவரது நண்பர் குமார் ஆகியோர் எங்களை தொடர்பு கொண்டு, ‘ஹை ரிச்’ என்ற நிறுவனம் நடத்தி வருவதாக கூறினர். வங்கியில் கடன் பெற்று தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு தொகையை இரட்டிப்பாக வழங்குவதாகவும், மேலும் அந்தக் கடனை நிறுவனம் சார்பாகவே செலுத்திவிடும் என்றும் உறுதியளித்தனர். பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறினர்.

அவர்களின் வாக்குறுதியை நம்பி, நாங்கள் 35 பேர் வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று 2024 ஆம் ஆண்டில் குமார் என்பவரிடம் ஒப்படைத்தோம். ஆனால் பல மாதங்கள் கடந்தும், கலா மற்றும் குமார் ஆகியோர் எங்களுக்கு பணம் திருப்பித் தரவோ, வங்கிக் கடனைச் செலுத்தவோ செய்யவில்லை.


அவர்கள் எங்களை மோசடி செய்ததால், வங்கியின் நிர்வாகம் எங்களது தனிப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. மேலும் கடன் தொகையைச் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கடும் அவதியடைந்துள்ளோம். எனவே, பணத்தை இரட்டிப்பு வழங்குவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்த கலா, குமார் மற்றும் அவர்களுக்கு ஜாமீனாக கையெழுத்திட்ட தருமபுரியைச் சேர்ந்த சங்கர் ஆகியோரிடமிருந்து எங்களது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies