பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார். அவற்றில் மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி ஏற்பட்டு, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு மட்டுமே தண்ணீர் சேமிக்கவும், சேமித்த தண்ணீரை துணி மூலமாக மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. டயர்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். பேரணி நகர பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு வரை சென்று நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, கலைக்குழு மூலம் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இந்நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
மேலும், தன்னார்வலர்கள் நிறுவனம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு டார்ச் லைட்கள் வழங்கும் நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். பி. வெங்கடேஸ்வரன், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. மனோகர், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், நகர் நல அலுவலர் திரு. இலட்சியவர்ணா, ஆதி பவுண்டேஷன் தலைவர் திரு. ஆதிமூலம், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.jpg)