தருமபுரி, அக்டோபர் 2:
மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157-வது பிறந்தநாள் விழா தருமபுரி பாரதமாதா மக்கள் சிந்தனை குழு சார்பில் இன்று (2 அக்டோபர் 2025) தருமபுரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவின் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமை வகித்தார். செயலாளர் வ. செளந்திரபாண்டியன் வரவேற்று பேசியார்.
மகாத்மா காந்தி சிலைக்கு தொழிலதிபர் சிவா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் தே. சாந்தி மாலை அணிவித்து சிறப்பித்தனர். மேலும், தலைமை ஆசிரியர் பணி ஓய்வு மா. தேசி, மருத்துவர் பூஜா, இலக்கியச்செல்வி நித்தியபிரியா உள்ளிட்டோர் மாலை அணிவித்து விழாவை சிறப்பித்தனர். ஜவஹர்லால் நேரு சிலைக்கு எழுத்தாளர் கோவிந்தராஜ், விவசாயி சேகர், தொழிலதிபர் வாசுதேவன் ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொழிலதிபர் ஏ.ஆர். சக்திவேல் மற்றும் இராகமாலிகா மணி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சந்தைபேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவிகள் விடுதலை போராளிகளின் பங்களிப்பைப் பற்றிச் சிறப்பாக உரையாற்றினர். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் இராஜாகிருஷ்ணன் நன்றி உரை வழங்கினார்.