Type Here to Get Search Results !

எடப்பாடி பழனிசாமி மக்களுடன் பரப்புரை – 2026 தேர்தலில் அதிமுக மக்களாட்சியை மக்கள் விரும்புகின்றனர் என பேச்சு.


பாப்பிரெட்டிபட்டி, அக்டோபர் 14:

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார், அதன் ஒரு பகுதியாக பாப்பிரெட்டிபட்டி தொகுதியில்  அக்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் எழுச்சிமிகு வரவேற்பிற்கிடையில், அவர் உரையாற்றினார். அதில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களை எதிர்கட்சி அரசு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, திமுக ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.


எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது: “தமிழ்நாடு முதல்வர் ஒருபுறம் ‘முதலீட்டை ஈர்க்கிறேன்’ என்ற பெயரில் வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததா? மக்களின் பதில் ‘இல்லை’ தான்.” மேலும் “கரூர் சம்பவத்தின் போது கூட, திமுக அரசின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சம்பிரதாய போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு உல்லாசச் சுற்றுலா சென்றுவிட்டார். மக்கள் மீது துளியும் அக்கறை இல்லாத இவர்கள் ஆட்சி செய்தால், நாட்டின் நலன் காக்க முடியுமா?”, “இப்படிப்பட்ட மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சியாளர்களை விரட்டி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக தலைமையிலான மக்களாட்சியை நிறுவுவார்கள். இது உறுதி!” என பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies