மொரப்பூர், அக்டோபர் 23:
மொரப்பூர் அடுத்த கல்லாவி பகுதியில் ஓட்டுநர்களுக்கான புதிய அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீர்த்தகிரி அவர்கள் தலைமை வகித்து, ஓட்டுநர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து விரிவாக உறுப்பினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் விளக்கமளித்தார்.
புதியதாக செயலாளராக பொறுப்பேற்றுள்ள குமார் (மோகன்) அவர்கள், ஓட்டுநர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதையும் தெளிவுபடுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவில் கே. சரவணன் அவர்கள் பொருளாளராக நன்றி உரையாற்றினார். மேலும், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பிரபு, ஜெகநாதன், சரவணன், ரீகன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழா கல்லாவி பகுதியில் ஓட்டுநர் நலனுக்கான முக்கியமான முன்னேற்றமாகப் பாராட்டப்பட்டது.

.jpg)