Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் 93,379 நபர்கள் பயன் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, அக். 03 – 

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற 104 முகாம்கள் மூலம் மொத்தம் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கிவைத்த இந்தத் திட்டம், நோய்கள் வரும்முன் அதனைத் தடுக்கவும், ஏழை மற்றும் எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவைகளை அளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின் கீழ்,

  • 2021-2022 ஆம் ஆண்டில் 24 முகாம்கள் மூலம் 11,642 நபர்கள்,

  • 2022-2023 ஆம் ஆண்டில் 24 முகாம்கள் மூலம் 25,614 நபர்கள்,

  • 2023-2024 ஆம் ஆண்டில் 24 முகாம்கள் மூலம் 26,583 நபர்கள்,

  • 2024-2025 ஆம் ஆண்டில் (மார்ச் 10, 2025 வரை) 32 முகாம்கள் மூலம் 29,540 நபர்கள் பயனடைந்துள்ளனர்.


இதன் மூலம் மொத்தம் 104 முகாம்கள் மூலம் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies