அரூர், அக் 01 -
தருமபுரி திமுக மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி அரூர் உள்விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர். சிவகுரு, துணை அமைப்பாளர்கள் தங்கசெழியன், நாசர், மகேஷ்குமார், ஹரிபிரசாத் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் போட்டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இதில் தருமபுரி மேற்கு மாவட்டத்தின் அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் ஏராளமாக பங்கேற்கின்றன. முதல் பரிசாக ரூ.40,000, இரண்டாம் பரிசாக ரூ.30,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.20,000 என பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில் எஸ். ரஜேந்திரன், நகர செயலாளர் முல்லைரவி, ஒன்றிய செயலாளர்கள் ஆர். வேடம்மாள், கோ. சந்திரமோகன், சி. தென்னரசு, ஐடி விங் கு. தமிழழகன், முஜீப் முகமத்அலி, நகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போட்டி வெற்றிகரமாக நடைபெற மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தீ. கோடீஸ்வரர் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

.jpg)