Type Here to Get Search Results !

தருமபுரியில் ஏழைப் பெண்களுக்கு ரூ.2.13 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி வழங்கப்பட்டது - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, அக். 15:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 517 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி 13 லட்சம் 75 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், 4.13 கிலோ தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், இதுவரை செயல்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை, தற்போது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என மாற்றியமைத்து செயல்படுத்தி வருகிறார்.


ஆண்டுவாரியாக வழங்கப்பட்ட நிதியுதவி விவரம்:

2022–2023:

  • 10ஆம் வகுப்பு படித்த 5 பெண்களுக்கு ரூ.1.25 லட்சம் நிதியுதவி மற்றும் 0.04 கிலோ தங்க நாணயம்.

  • பட்டம்/பட்டயம் படித்த 90 பெண்களுக்கு ரூ.45 லட்சம் நிதியுதவி மற்றும் 0.72 கிலோ தங்க நாணயம்.

2023–2024:

  • 10ஆம் வகுப்பு படித்த 159 பெண்களுக்கு ரூ.39.75 லட்சம் நிதியுதவி மற்றும் 1.27 கிலோ தங்க நாணயம்.

  • பட்டம்/பட்டயம் படித்த 202 பெண்களுக்கு ரூ.1.01 கோடி நிதியுதவி மற்றும் 1.6 கிலோ தங்க நாணயம்.

2024–2025:

  • 10ஆம் வகுப்பு படித்த 15 பெண்களுக்கு ரூ.3.75 லட்சம் நிதியுதவி மற்றும் 0.12 கிலோ தங்க நாணயம்.

  • பட்டம்/பட்டயம் படித்த 46 பெண்களுக்கு ரூ.23 லட்சம் நிதியுதவி மற்றும் 0.36 கிலோ தங்க நாணயம்.

இதன் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளில்,

  • 10ஆம் வகுப்பு படித்த 179 பெண்களுக்கு ரூ.44.75 லட்சம் மற்றும் 1.43 கிலோ தங்க நாணயம்,

  • பட்டம்/பட்டயம் படித்த 338 பெண்களுக்கு ரூ.1.69 கோடி மற்றும் 2.70 கிலோ தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளன.


மொத்தம் ரூ.2.13 கோடி நிதியுதவி மற்றும் 4.13 கிலோ தங்க நாணயம் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies