இன்டூர், அக்டோபர் 24:
இன்டூர் பஸ் நிலையம் அருகில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், ஒரு வார கால ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் சோமன அள்ளியில் உள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் சார்பில் நடைபெற்று வருகிறது.
இதனை ஒட்டி, பொது மேலாளர் பாலு தலைமையில் இன்டூர் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் மயிலாட்டம், கரகாட்டம், பம்பை மற்றும் தவில் கலைஞர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு ஊழல் ஒழிப்பின் முக்கியத்துவத்தை கலை வடிவில் எடுத்துரைத்தனர். மேலும், இன்டூர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி, தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தனர். இந்த முயற்சியின் மூலம் பொதுமக்களிடையே நேர்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்து விழிப்புணர்வு பரப்பப்பட்டது.

.jpg)