தருமபுரி, அக். 23 -
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு, நகராட்சி மற்றும் சமூக சேவை அமைப்புகள் இணைந்து டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் நடத்தியது. மழைக்காலம் என்பதால் டெங்கு பரவுதல் அதிகரிக்கும் நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இது அவசியமாக இருந்தது. நிகழ்ச்சியில் சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்தனர். ஆட்சியர் மூலம் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பேரணி கல்லூரி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை நடந்தது. தன்வந்திரி ஹெல்த் கேர், ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல், அம்பிகா பாராமெடிக்கல், ஹோலி கிராஸ் பாராமெடிக்கல், சபரி ஐயப்பா பாராமெடிக்கல், விவேகானந்தா பாராமெடிக்கல், வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல், சாய் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு டெங்கு கொசு கண்டறியும் டார்ச் லைட் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் குளோபல் பூபதி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையர் சேகர், சிறப்பு விருந்தினர்கள் ஆட்சியர் ரெ.சதீஷ், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்புரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகர், மருத்துவர் ராஜேஷ் பி.ஜி.ஆர்., மருத்துவர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் வழங்கினர்.
தருமபுரி நகர் நல அலுவலர் இலட்சியவர்ணா, காமதேனு சாரிட்டிஸ் சங்கர், கயல் குழுமம் அறிவழகன், பசுமை ஆசிரியர் சங்கர், ஆதி பவுண்டேஷன் ஆதிமூலம், மை தருமபுரி செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், அமைப்பாளர் செந்தில்குமார், கக்கன் இளைஞர் மன்றம் கபில் தேவ், கிராம விழிகள் அறக்கட்டளை வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாரதி கிராமிய நாட்டுப்புறக் கலைக்குழு மற்றும் தெருக்கூத்து கலை குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். தருமபுரி டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மை தருமபுரி நிறுவனம் தலைவர் சதீஸ் குமார் ராஜா மற்றும் எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் ஒருங்கிணைத்தனர்.

.jpg)
 
.jpg) 
.jpg) 
.jpg) 
.jpg) 
.jpg)