Type Here to Get Search Results !

தருமபுரியின் பெருமை: திரு. B.N. குருராவ் அவர்களின் கண் தானம் — இந்தியன் பில்லர்ஸ் அமைப்பு நன்றி தெரிவித்தது.


தருமபுரி, அக். 21 —

சேவையின் அடையாளமாக திகழ்ந்த பாரத மாதா மக்கள் சிந்தனை குழு மற்றும் கம்பன் கழகத்தின் கௌரவத் தலைவர், அனைவரின் மதிப்பிற்குரிய திரு. B.N. குருராவ் அவர்கள் இன்று (21.10.2025) காலை 5.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவருடைய விருப்பப்படி, குடும்பத்தினர் அவரது கண்களை தானம் செய்ய முடிவு செய்தனர்.


அவரது வீட்டிற்கு அருகிலுள்ள மருத்துவர் சந்தானம் அவர்களின் வழியாக, தருமபுரி இந்தியன் பில்லர்ஸ் அமைப்பிற்கு கண் தானம் குறித்த தகவல் வழங்கப்பட்டது. இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் தலைவர் திரு. வினோத் நரசிம்மன், பெங்களூரு நாராயண நேத்ராலயா மருத்துவர் ஆகான்ஷா, மற்றும் மருத்துவமனை மேலாளர் திரு. அசோக் ஆகியோர் நேரில் சென்று கண்களை தானமாக பெற்றனர்.


உதவும் உறவுகள் திரு. ராமன், கம்பன் கழகத்தின் திரு. பரமசிவம் ஆகியோர் முன்னிலையில், குடும்பத்தினருக்கு கண் தானத்திற்கான நன்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. திரு. B.N. குருராவ் அவர்களுக்கு பாலச்சந்திரன், துவாரகநாத் பிரபு, சீனிவாசன் ஆகிய மூன்று மகன்களும், வேணி ரகோத்தமன் என்ற மகளும் உள்ளனர். கண் தானம் செய்த குடும்பத்தாருக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், பாரத மாதா மக்கள் சிந்தனை குழு உறுப்பினர்கள், மற்றும் கம்பன் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.


கண்களை தானம் செய்ய விரும்புபவர்கள் இந்தியன் பில்லர்ஸ் அமைப்பை 9384444108 அல்லது 9340000108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies