தருமபுரி, அக். 19.
தீபாவளி திருநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெற்றோர் இல்லாத குழந்தைகள், கைம்பெண்கள், மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகள், அமரர் ஊர்தி ஓட்டுநர்கள், உடற்கூறாய்வு மைய ஊழியர்கள், மயான பணியாளர்கள் மற்றும் ஏழ்மையில் வாழும் குடும்பங்களுடன் “மை தருமபுரி அமைப்பு” சார்பில் “தித்திக்கும் தீபாவளி” நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பல நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் குழந்தைகள் மற்றும் நலிவுற்றோருக்கு புத்தாடைகள், இனிப்புகள், உணவுகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த தேவகி தினேஷ், முனியம்மா முனியாண்டி, தமிழ் குமரன் சங்கரி, சுரேன் மனோகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அமைப்பின் நிறுவனர் தலைவர் திரு சதீஸ் குமார் ராஜா அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார். நிகழ்வை செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சண்முகம், சையத் ஜாபர், தன்னார்வலர்கள் கணேஷ், அம்பிகா, நித்யா, இந்திரா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.