தருமபுரி, அக். 21 -
ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி ‘‘காவலர் வீர வணக்க நாள் (Police Commemoration Day)’’ ஆக இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அதனை முன்னிட்டு இன்று (21.10.2025) தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன், B.Com., B.L., அவர்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து வீர காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. N. பாலசுப்பிரமணியம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) திரு. K. ஸ்ரீதரன், துணை காவல் கண்காணிப்பாளர், ஊர்காவல் படைத்தலைவர், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பல காவலர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.