தருமபுரி, அக். 30 -
கிராம விழிகள் அறக்கட்டளை சார்பில் மக்களாட்சியின் அடித்தளமாக விளங்கும் “கிராம சபை” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இணைய வழி பயிற்சி வகுப்பு நாளை (அக்டோபர் 30) வியாழக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை Google Meet தளத்தின் மூலம் நடைபெற உள்ளது.
இந்த இணைய வழி பயிற்சியில் தன்னாட்சி இயக்கத்தின் திரு. நந்தக்குமார் அவர்கள் கிராம சபையின் முக்கியத்துவம், செயல்முறை, மக்கள் பங்கேற்பு, ஊழல் தடுப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி நோக்கில் கிராம சபையின் பங்குகளை விளக்கவுள்ளனர்.
இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் இணைப்பு:
இந்த நிகழ்வில் அனைத்து ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, கிராம சபை வழியாக ஊழலற்ற வெளிப்படையான ஊராட்சி நிர்வாகத்தை உருவாக்க வழிவகுக்கும் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
📅 நாள்: 30.10.2025 (வியாழக்கிழமை)
🕖 நேரம்: இரவு 8 மணி – 9 மணி வரை
🎤 பயிற்சியாளர்: திரு. நந்தக்குமார் (தன்னாட்சி இயக்கம்)
📍 இணைப்பு: https://meet.google.com/asi-ngie-yfa

