தருமபுரி, அக்.30 -
தருமபுரியில் இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் பெருமையுடன் நடைபெறும் “தகடூர் மார்கழி திருவிழா” இவ்வாண்டு வெகு சிறப்பாக நான்காவது ஆண்டாக நடத்தப்பட உள்ளது. 2025–2026 ஆம் ஆண்டுக்கான இவ்விழா, ஜனவரி 1 முதல் 5 வரை (ஐந்து தினங்கள்) முப்பெரும் கொண்டாட்டமாக நடைபெறும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தகடூர் மார்கழி திருவிழா, தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசாரங்கள் மற்றும் மக்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான தளமாக திகழ்கிறது. இந்த ஆண்டும் பல்வேறு கலைப்பிரிவுகளில் போட்டிகளும் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
பங்கேற்கும் பிரிவுகள்:
- 
திருப்பாவை
 - 
திருவம்பாவை
 - 
பரதநாட்டியம்
 - 
சங்கீதம்
 - 
கரகாட்டம்
 - 
ஒயிலாட்டம்
 - 
பம்பை, மரக்கால் ஆட்டம்
 - 
தோல் பறை
 - 
காவடியாட்டம்
 - 
கோலாட்டம்
 - 
தப்பாட்டம்
 - 
தற்காப்பு கலைகள்
 - 
கிராமிய கலைகள்
 - 
மற்றும் பிற தனித்திறமைகள்
 
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது முழுக்க முழுக்க இலவசம் என்பதோடு, முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஸ்பாட்டு ரெஜிஸ்ட்ரேஷன் (spot registration) கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்கேற்பதற்காக ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்:
📅 முன்பதிவு செய்ய கடைசி நாள்: 30 நவம்பர் 2025
🎯 ஸ்பான்சர்ஷிப் தொடர்புக்கு:
📞 93400 00108 / 93844 44108

.jpg)