பென்னாகரம், அக். 09 -
பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட மடம் கிராமத்தில் திரௌபதி அம்மன் தீ மிதி திருவிழா இன்று (09.10.2025) நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை, பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான திரௌபதி அம்மனை தமது சொந்த கிராமமான மடம் கிராமத்திற்கு கொண்டு வந்து மூன்று நாட்கள் அலங்காரம் மற்றும் பூஜை செய்து மகிழ்விப்பது பழமையான மரபு. இந்த விழாவின் முக்கிய நிகழ்வு திருவிழா நாட்களில் பக்தர்கள் அம்மன் சிலைகளைத் தலை மேல் தூக்கி தீ மூட்டப்பட்ட நெருப்பில் நடந்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவதாகும்.
இவ்விருப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆறுதலும் பக்தியுமாக விழாவை சிறப்பித்தனர். மக்கள் ஆராதனை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை அனுசரிக்கும் விதமாக திருவிழா சீரிய மரபு நடையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.