தருமபுரி, அக்.09 -
தருமபுரி மாவட்டம், வடகிழக்கு பருவமழை – 2025 முன்னேற்பாடுகள் தொடர்பாக, சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரையின் பேரில் மாவட்டம் உள்ள 7 வட்டங்களுக்கு துணை ஆட்சியர் நிலை கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட்டங்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள்:
-
தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் – 94450 00428
-
அரூர் வருவாய் கோட்ட அலுவலர் – 94454 61802
-
பாலக்கோடு தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) – 94454 61734
-
பென்னாகரம் உதவி ஆணையர் (ஆயம்) – 94445 55118
-
பாப்பிரெட்டிப்பட்டி – மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 94450 00216
-
காரிமங்கலம் – மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் – 94454 77851
-
நல்லம்பள்ளி – மாவட்ட ஆதிதிரவிடார் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் – 73388 01256
மேற்கண்ட அலுவலர்கள் தங்களது வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் பேரிடர் சம்பந்தப்பட்ட பணிகளை கண்காணிப்பார்கள். மேலும், தருமபுரி மாவட்டத்திற்கு இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சென்னை அவர்கள் கண்காணிப்பு அலுவலராக உள்ளார். வடகிழக்கு பருவமழை காலத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டால், மேற்கண்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.