தருமபுரி, அக். 09 -
தருமபுரி கிழக்கு மாவட்டம், நல்லம்பள்ளி தெற்கு ஒன்றியம், கம்பம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த விஜயகுமார், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சி தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஆ.மணி (MP) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நல்லம்பள்ளி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.பி. மல்லமுத்து முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சண்முகம், பென்னாகரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பச்சையப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், துணை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வர், ஒன்றிய துணை செயலாளர் தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுகவில் இணைந்த விஜயகுமாருக்கு தலைமையிலான நிர்வாகிகள் மலர்மாலையணிவித்து வரவேற்பு அளித்தனர்.