பாலக்கோடு, அக். 09 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்துநிலையம் முன்பு பாஜகவின் வாக்கு திருட்டை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் கையெமுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவி ரோஜா கோவிந்தசாமி தலைமையேற்றார். மகிளா காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் திரவுபதி முன்னிலை வகித்தார்.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டிய பேச்சாளர்கள், பாஜகவும் இந்திய தேர்தல் ஆணையமும் இணைந்து வாக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனை கண்டித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெமுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கையெழுத்துகளை பதிவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க தலைவர் கோவிந்தசாமி, தொழிற்சங்க நகர தலைவர் ஜின்னா, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக், மனித உரிமை மாவட்ட தலைவர் சதிஷ், நகர தலைவர் கணேசன், மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர், மகளிர் அணி நிர்வாகிகள் முருகம்மாள், தேவகி, பருக் உன்னிசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மகிளா காங்கிரஸ் நகர தலைவி முக்தார்பேகம் நன்றி தெரிவித்தார்.