தருமபுரி – அக்டோபர் 31:
நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ.மணி எம்.பி., தொகுதி பார்வையாளர்கள் செங்குட்டவன் மற்றும் பாரி ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் வழங்கிய ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதோடு, வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்வது பற்றியும் விரிவாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மேலும், வருகிற நவம்பர் 3ம் தேதி தருமபுரி ஜோதி மஹாலில் நடைபெறும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் ஆ.மணி எம்.பி. மகன் திருமண விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேடம்மாள், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பெரியண்ணன், வைகுந்தம், காவேரி, கருணாநிதி, வீரமணி, பச்சையப்பன், செல்வராஜ், மல்லமுத்து, கிருஷ்ணன், சக்திவேல், சந்திரமோகன், தென்னரசு, அரூர் நகர செயலாளர் முல்லைரவி, அரூர் நகராட்சி தலைவர் சூர்யா தனபால், பேரூராட்சி செயலாளர்கள் வீரமணி, சண்முகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கெவுதம் நன்றி தெரிவித்தார்.

.jpg)