தருமபுரி, அக். 08 -
UYEGP திட்டத்தில் பயன்பெற, குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு கல்வித் தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பு – குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் பொதுப் பிரிவினருக்கு 45 வயது, சிறப்பு பிரிவினருக்கு (ஆதி திராவிடர், பழங்குடியினர், மகளிர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்) 55 வயது ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.8 இலட்சம் க்குள் இருக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் தருமபுரி மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு தடைசெய்த பொருட்களை தவிர்த்து மற்ற எல்லா வகை பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மளிகை கடை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷ்னரி கடை, மொபைல் உபரிபாகங்கள் கடை, வாகன உதிரிபாகங்கள் கடை உள்ளிட்ட பல்வேறு வியாபார துறைகளில் இதன் மூலம் தொழில் தொடங்கலாம்.