தருமபுரி, அக். 09 -
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் மற்றும் காரிமங்கலம் ஒன்றியம் பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து தொடங்கி வைத்த "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் அரசு சேவைகள் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படுகின்றன.
இன்று (09.10.2025) PUES பேடரஹள்ளி பள்ளி வளாகம், மோதூர் VPRC கட்டிடம் போன்ற இடங்களில் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமார் 40-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பின்வரும் உதவிகள் வழங்கப்பட்டன:
-
பட்டா மாறுதல் ஆணைகள்
-
பிறப்பு சான்றிதழ்கள்
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டைகள்
-
மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள்
-
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள்
நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகளை சார்ந்த 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 15 அரசு துறைகளை சார்ந்த 46 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் பெறப்படும் மனுக்கள் உடனடியாக தீர்வு காணும் வகையில் பணிகள் நடைபெறும்; அதிகபட்சம் 45 நாட்களுக்குள் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு வழங்கப்படும்.