அரூர், அக். 10 -
இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, தருமபுரி மாவட்டம் அரூர், வாழைத்தோட்டம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சித்தேரி பகுதிகளில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி (GTRPS) மாணவர்களுக்கான பள்ளி வாகன போக்குவரத்து சேவை 09.10.2025 காலை சிறப்பாக தொடங்கப்பட்டது.
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஆரவாரத்துடன் திருவிழா போல் நிகழ்வை கொண்டாடினர். சீர்வரிசை, மாலைகள், ஆரத்தி, தார தப்பட்டை இசை என மகிழ்ச்சியான சூழலில் குழந்தைகள் வாகனங்களில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டனர். பின்பு பெற்றோர்களும் வாகனங்களில் பள்ளிக்கு வந்து, நிகழ்வை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். தொடர்ந்து, வாகனங்களின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா தனி வட்டாட்சியர், ஸ்ரீதேவி மஹா டிரஸ்ட் நிர்வாகிகள், பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர், ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.