தருமபுரி, அக். 10 -
இந்நிகழ்ச்சியின் போது, அறக்கட்டளை உறுப்பினர்கள் அங்குள்ள மனநல நண்பர்களிடம் நேரடியாக பேசிப் பாசத்தையும் அன்பையும் பகிர்ந்து கொண்டனர். “மனநலம் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் அன்பை விதைப்போம், மனிதநேயம் காப்போம்” என்ற செய்தியை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது.
அங்கிருந்த நண்பர்களுக்கு உணவுகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் பிரீத்தா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மனநலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். நிகழ்ச்சிக்கு அறம் சமூகம் அறக்கட்டளை நிறுவனர் திரு. ரமேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். எண்ணங்களின் சங்கமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மை. தருமபுரி சதீஸ் குமார் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மனநலம் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் பரப்புவது என்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும், இத்தகைய பணிகள் மனிதநேயத்தை உயர்த்தும் எனவும், அறக்கட்டளை சார்பில் தெரிவித்தனர்.