தருமபுரி, அக்டோபர் 12 -
தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதுவதற்கான தேர்வுகள் இன்று மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 43 மையங்களில் நடைபெற்றது.
இதையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்காக பல்வேறு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள
-
அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
-
இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
-
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
-
மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
ஆகிய தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு நடைமுறை, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை பரிசோதித்தார். இத்தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 11,961 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 11,305 பேர் தேர்வில் பங்கேற்றனர், மேலும் 656 பேர் பங்கேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு மையங்கள் அனைத்தும் அமைதியான சூழலில் சிறப்பாக நடைபெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.