தருமபுரி, அக்டோபர் 13:
இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் விழிப்புணர்வு மராத்தான் ஆகும். தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்காக தனித்தனியாக தொடங்கப்பட்ட இந்தப் போட்டியை தருமபுரி டிஎஸ்பி சிவராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மராத்தான், நான்கு ரோடு – பாரதிபுரம் வழியாக சென்று மீண்டும் மைதானத்தில் நிறைவடைந்தது. மொத்தம் 5.5 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 5,000 பேர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் டி-ஷர்ட்கள் வழங்கப்பட்டன.
-
ஆண்கள் பிரிவு:🥇 1ம் இடம் – லோகேஸ்🥈 2ம் இடம் – சந்தோஷ்குமார்🥉 3ம் இடம் – பூவரசன்
-
பெண்கள் பிரிவு:🥇 1ம் இடம் – கௌரி🥈 2ம் இடம் – இளவரசி🥉 3ம் இடம் – கொடிலா
முதல் பரிசு ₹5,000, இரண்டாம் பரிசு ₹4,000, மூன்றாம் பரிசு ₹3,000 என வழங்கப்பட்டதுடன், இரு பிரிவுகளிலும் 25 பேருக்கு பணப் பரிசு, பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க கவர்னர் சிவசுந்தரம், ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டிஎன்சி மணிவண்ணன், உதவி கவர்னர் பிரதீப் குமார், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழிப்புணர்வை வலுப்படுத்தினர்.