தருமபுரி, அக். 15:
வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் (தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவை) ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க விரும்புவோருக்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “வேளாண் பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குவோருக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப்கள் புதிய தொழில் வாய்ப்புகளையும், புதுமையான தீர்வுகளையும் உருவாக்கி, வேகமாக வளரக்கூடிய திறன் கொண்டவை. ஆனால் இவை புதிய வணிகமாக இருப்பதால் எதிர்கால சந்தை நிலைமை நிச்சயமற்றதாக இருக்கும். அதனால் அரசு ஸ்டார்ட் அப் தொழில்களுக்கு நிதி ஆதரவாக மானியம் வழங்குகிறது.”
🔹 மானியம் விபரம்:
-
புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு: ஒரு அலகிற்கு ரூ. 10.00 லட்சம் மானியம்.
-
ஏற்கனவே இயங்கும் தொழிலை விரிவுப்படுத்த / சந்தைப்படுத்துபவர்களுக்கு: ஒரு அலகிற்கு ரூ. 25.00 லட்சம் மானியம்.
🔹 தகுதி நிபந்தனைகள்:
-
விண்ணப்பதாரர் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) அல்லது ஸ்டார்ட் அப் இந்தியாயில் பதிவு செய்திருக்க வேண்டும்.
-
நிறுவனம் கம்பெனி சட்டம், 2013-ன் கீழ் தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
-
கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக லாபம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
🔹 தொடர்பு கொள்ள:
புதுமை தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகம் (மதிகோண்பாளையம்) இடத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை அணுகலாம். இத்திட்டத்தின் மூலம் மாவட்ட இளைஞர்கள் மற்றும் விவசாயத் தொழில் ஆர்வலர்கள் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டார்.