தருமபுரி, அக். 12 -
மாவட்டத்தின் 6 நிலையங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தீ விபத்துகளிலிருந்து தங்களை பாதுகாக்கும் விதங்கள் குறித்து கற்றுக்கொண்டனர். தீயணைப்பு துறை அலுவலர்கள், தீயணைப்பான்களை சரியாக பயன்படுத்தும் நடைமுறை, LPG சமையல் எரிவாயு தீ விபத்து, வாகன தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு அவசர நிலை நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களையும் காட்சிப்படுத்தினர்.
மேலும், “விபத்தில்லா தீபாவளி” குறித்தும் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததுமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அதோடு, வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமையேற்று விழிப்புணர்வு உரையாற்றினார். தீயணைப்பு துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.