Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 8,35,500 பனை விதைகள் நடும் திட்டம் – சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வரலாற்றுச் செயல் என ஆட்சியர் ரெ.சதீஸ் அறிவிப்பு.


தருமபுரி, அக். 10 -

தருமபுரி மாவட்டத்தில் பனை விதைகள் நடும் திட்டம் - 2025 ஆம் ஆண்டுக்காக, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்புகள் இணைந்து மொத்தம் 8,35,500 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆட்சியர் ரெ.சதீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்: “தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை ஆகியவற்றின் வலுவான ஆதரவுடன், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பின் ஒத்துழைப்புடன் 2024 ஆம் ஆண்டு பனை விதை நடவு இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் மொத்தம் 44,90,423 பனை விதைகள் நடவு செய்யப்பட்டு, Udhavi App மூலம் புவியியல் அடையாளத்துடன் பதிவேற்றப்பட்டது,” என அவர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, 2025 பனை விதை நடவு இயக்கம் செப்டம்பர் 16, 2025 (உலக ஓசோன் தினம்) அன்று தொடங்கி, அக்டோபர் 15, 2025 (டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள்) அன்று நிறைவடைய உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 6 கோடி பனை விதைகள் நீர்நிலைகள், கடலோரப் பகுதிகள், காலியாக உள்ள நிலப்பரப்புகள் மற்றும் பனை காடுகள் உருவாக்கும் நோக்கில் நடவு செய்யப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் 8,35,500 பனை விதைகள் நடவு செய்யப்படுகிறது. ஆட்சியர் ரெ.சதீஸ் அவர்கள் மேலும் தெரிவித்தார்:


“சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்த 2025 பனை விதை நடவு இயக்கத்தை நாம் அனைவரும் இணைந்து வெற்றிகரமாக ஆக்குவோம்.”

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies