தருமபுரி, அக்.10:
தருமபுரி நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தை நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது அவர்கள் தலைமையேற்று நடத்தினார். நகராட்சி ஆணையாளர் சேகர் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்போது ஆணையாளர் அவர்கள், உறுப்பினர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். மேலும், நகராட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தருமபுரி நகராட்சியைச் சேர்ந்த திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.