தருமபுரி, அக்டோபர் 04, 2025:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பாரத பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக சார்பில் தென்னிந்திய அளவில் மாபெரும் 2 நாள் கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டி நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாஜக நகர தலைவர் ஆர். கணேசன் அவர்கள் தலைமை வகித்தார்.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர், தருமபுரி நகர தலைவர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர்கள் சிவலிங்கம், நோன்பரசு, பசுபதி, நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தெய்வமணி, மாநில இளைஞர் அணி செயலாளர் பிரபாகர், முரளி, மற்றும் மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே. சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இறுதி கட்ட போட்டியை துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகளின் கபாடி வீரர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.
பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா அவர்கள் கலந்து கொண்டு,
-
முதல் பரிசு ₹50,000,
-
இரண்டாம் பரிசு ₹30,000,
-
மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள் தலா ₹15,000,
-
ஆறுதல் பரிசாக 8 அணிகளுக்கு தலா ₹5,000 மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ₹50,000 ஊக்கப் பரிசாக வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பி.ஆர். மாதையன், சின்னவன், சிவநாதன், வேலு, ராஜாராம், தென்பாண்டியன், பூபால், சதாசிவம், அருணாச்சலம், தண்டபானி, சரவணன், ஸ்ரீராம், முரளி, பாலகிருஷ்ணன், நாகராஜ், சிவசக்தி, பிரவின், வெங்கட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

.jpg)