தருமபுரி, அக்டோபர் 07, 2025:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு திரெளபதியம்மன் கோயில் முன்பு, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் செல்வம், துணைத் தலைவர் மகேஸ்வரன், துணைச் செயலாளர்கள் தெய்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவற்றில் முக்கியமானவை:
-
20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
-
ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
-
2021ம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
-
தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் கட்டாயப்படுத்தும் நடைமுறையை கைவிட வேண்டும்.
-
மாவட்ட பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
-
நகை மதிப்பீட்டாளர்கள் மற்றும் கணினி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
-
தாயுமாணவர் திட்டத்தில் வீடு தேடி சென்று பொருட்கள் விநியோகிப்பதில் உள்ள சிரமங்களை தீர்க்க வேண்டும்.
-
அங்காடிகளுக்கு தனித்தனியாக பி.ஓ.எஸ். இயந்திரங்கள், செல்போன் மற்றும் இணைய வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-
மகளிர் பணியிடங்களில் கழிவறை வசதி செய்து தர வேண்டும்.
இதனை வலியுறுத்தி, போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

.jpg)