தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால், மின்சார சட்டம் 2003-ன் கீழ் வட்டார அளவில் மின்விநியோகம் குறித்த பொதுமக்களின் குறைகளை தீர்க்க “நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் (Consumer Grievance Redressal Forum)” தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் 06.10.2025 அன்று நிறைவடைந்துள்ளது. 07.10.2022 முதல் 06.10.2025 வரை இம்மன்றம் இயங்கியது.
இதையடுத்து, புதிய உறுப்பினர் நியமனத்திற்காக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மின்சார சட்டத்தின் கீழ் செயல்படும் நுகர்வோர் குறைத்தீர்க்கும் மன்றத்தில் உறுப்பினராக மூன்று ஆண்டுகள் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
-
சட்டப் பட்டம் (B.L. / L.L.B.) பெற்றிருக்க வேண்டும்.
-
நிதித்துறையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை
மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், தருமபுரி, என்ற முகவரிக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.