தருமபுரி, அக். 26 -
தருமபுரி மாவட்டம் – தமிழ்நாடு அரசு, சமூக நலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (ONE STOP CENTRE) பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Worker) (24x7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பக் காலம்: 17.11.2025 வரை.
சமர்ப்பிக்கும் இடம்: மாவட்ட சமூகநல அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டடம் பின்புறம், பழைய மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி – 636705.
பணியிட விவரம் மற்றும் தகுதிகள்:
-
பணியிடம்: 01 (பல்நோக்கு உதவியாளர், 24x7)
-
கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ஆம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்
-
பெண் பணியாளர் மட்டுமே, நன்கு சமைக்க தெரிந்திருப்பது அவசியம்
-
உள்ளூர் விண்ணப்பதாரர், மையத்தில் தங்க விருப்பம் உள்ளவர்
-
வயது: 38 ஆண்டுக்கு மேல் இல்லாமல் இருத்தல்
விண்ணப்ப செயல்முறை:
விண்ணப்பப் படிவத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியரின் இணையதள முகவரியில் www.dharmapuri.nic.in பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக அல்லது தபால் மூலமாக 17.11.2025 மாலை 5:00 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

.jpg)