தருமபுரி, அக். 26 -
தருமபுரி மாவட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., தகவலின்படி, தருமபுரி மாவட்டத்திலுள்ள 249 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பின்வரும் விவாதக் குறிகள் இடம்பெற உள்ளது:
-
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம்
-
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை
-
ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கைகள்
-
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்
-
வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
-
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II
-
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம்
-
இதர பொருட்கள்
மேற்காண் பொருட்கள் குறித்து விவாதிக்க அனைத்து ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளனர்.

.jpg)