தருமபுரி, அக். 08 -
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன் அவர்கள் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர்கள் வி.பி.சாமிநாதன் (தருமபுரி), கிருஷ்ணன் (காரிமங்கலம்) உள்ளிட்ட நிர்வாகிகள் கோபால், மனோகரன், எம்.சிவன், தங்கவேலு, முனுசாமி, ஜெயவேல், மல்லிகா, அன்னபூர்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது,
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்,
-
முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,
-
விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி, நிபந்தனையின்றி வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்
என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் இறுதியில், மாவட்ட குழு உறுப்பினர் பழனி நன்றி கூறினார்.