தருமபுரி, அக். 08 -
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (08.10.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இம்முகாமை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. S. மகேஸ்வரன், B.Com., B.L. அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. N. பாலசுப்பிரமணியம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு) திரு. K. ஸ்ரீதரன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 71 மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும், புதியதாக 51 மனுக்கள் பெறப்பட்டன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்கும் முகாம் மூலம், மக்களின் பிரச்சனைகள் நேரடியாக காவல் துறை அலுவலர்களால் கேட்டு தீர்க்கப்படும் என்பதால், பொதுமக்களிடையே இது சிறந்த வரவேற்பைப் பெற்றது.